மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குஉதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்ச்சி


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குஉதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் மூலம் மாற்றத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்ச்சி நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

இதில் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலம் வழங்கப்படும் உதவி உபகரணங்கள், மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 36 மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் ஒன்றிய இயன்முறை மருத்துவர் கவியரசு மற்றும் இயன் முறை டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story