மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நடராஜன், பொருளாளர் அன்புச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் காது கேளாத, வாய் பேசாத, மாற்றுத்திறனாளிகள் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை நிரந்தர பணியிடத்தில் பணியமர்த்த வேண்டும். அரசு பணிகளில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு 1 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story