மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-04T00:31:03+05:30)

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திண்டுக்கல்


மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை அறிவிக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் காளீஸ்வரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பகத்சிங் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்களை அறிவிக்காமலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் ஜெயந்தி உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.Next Story