மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2023 11:45 AM IST (Updated: 22 Feb 2023 11:45 AM IST)
t-max-icont-min-icon

கடலாடி, முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை தலைவர் நூர் முகம்மது தலைமை தாங்கினார். செயலாளர் முகமது சுல்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நடக்கும் பணிகளில் மாற்றுத்திறனாளிகளை கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு சில ஊராட்சிகள் புறக்கணிப்பதை கண்டித்தும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நபருக்கு முழு தொகை 281 ரூபாய் வழங்கிடவும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தனி அடையாள அட்டை வழங்கிடவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தாலுகா தலைவர் போஸ் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் முனியசாமி, துணைத்தலைவர் முத்து கண்ணன், இணை செயலாளர் மயில்சாமி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவப்பிரிய தர்ஷினி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.


Related Tags :
Next Story