மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக பணி வழங்கக்கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அஞ்சம்மாள், ஆனந்தன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணிநேர வேலை, முழு கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காது கேளாதோர் சங்க மாநில குழு உறுப்பினர் மகேஷ், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் லோகநாதன், பாண்டியன், சவுந்தரபாண்டியன், கணேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொருளாளர் லெட்சுமி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய அமைப்பாளர் ராஜாபிள்ளை, ஒன்றிய தலைவர் செல்வராஜ், ஒன்றிய அமைப்பாளர் கண்ணன், தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் வழங்கினர்.


Next Story