மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் நடராஜ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு பணி உறுதி செய்ய வேண்டும், 4 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும், குறைபாடுகளுக்கு ஏற்றவாறு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story