மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

குத்தாலத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் கமலநாதன், துணைத்தலைவர் மணிமேகலை, துணை செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தலைவர் கணேசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளை பணிதல பொறுப்பாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story