மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் காதுகேளாதோர், வாய் பேசாதோருக்கான கிளை சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் காதுகேளாதோர், வாய் பேசாதோருக்கான கிளை சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாநில கிளைக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட கிளை அமைப்பு நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு பணிகளில் காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலங்களில் மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.