மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்


மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 14 Sept 2023 2:15 AM IST (Updated: 14 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 55 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று சப்-கலெக்டர் மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அதில் 23 பயனாளிகளுக்கு அடையாள அட்டையும், 5 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும், 2 பயனாளிகளுக்கு ஊன்று கோலும், 1 பயனாளிக்கு சக்கர நாற்காலியும் வழங்கினார்.

மேலும் வேலைவாய்ப்பு, பெட்டிக்கடை, வீடு, வீட்டு மனை பட்டா, உதவித்தொகை, எந்திரம் பொருத்திய சக்கர நாற்காலி வேண்டி மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் உறுதியளித்தார்.

இதில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, மாவட்ட மாற்றுத்திறனாளி அதிகாரி ஜெகதீசன், தாசில்தார் அருள்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story