மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் 9-ந்தேதி நடக்கிறது
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
இந்த முகாமில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு யு.டி.ஐ.டி. அட்டை, உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, 100 நாள் வேலை அட்டை ஆகியவற்றை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






