இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு டிசம்பர் 10 மாற்றுத்திறனாளிகள் நல விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் டி.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சுரேஷ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்.
மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்கிட வேண்டும். படித்த மாற்றுத்திறன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு காதுகேட்கும் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.