மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
x

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

திருப்பூர்

குடிமங்கலம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் குடிமங்கலம் வட்டார வள மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் 26-ந் தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். 10 வயதுக்கு மேற்பட்டவர்களை நல வாரியத்தில் பதிவு செய்யப்படும். பேருந்து ரயில் பயணச் சலுகை கட்டணமில்லா அறுவை சிகிச்சை மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா உதவி உபகரணங்கள் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்படும். முகாமிற்கு வரும்போது பிறப்புச் சான்றிதழ்பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -5, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவை எடுத்து வந்து பயனடையலாம் என்று குடிமங்கலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

-----------


Next Story