குளச்சல் அருகே சாலையில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு


குளச்சல் அருகே சாலையில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

குளச்சல் அருகே சாலையில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சாம்ராஜ். இவருடைய மனைவி லெனின் மேரி (வயது 60). ஓய்வு பெற்ற ஆசிரியை. நேற்று முன்தினம் இவர் தன் பேரக்குழந்தையுடன் கல்லுக்கூட்டம் சந்திப்பில் கடைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த அமலோற்பவமேரி (55) என்பவர் பஸ்சில் நாகர்கோவில் சென்று விட்டு கல்லுக்கூட்டம் சந்திப்பு நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி சென்றார். அப்போது சாலையோரம் கிடந்த தங்க சங்கிலியை கண்டார்.

பின்னர் அந்த நகையை குளச்சல் போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த நகை லெனின் மேரி பேரக் குழந்தை தவற விட்ட நகை என்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணைக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி குழந்தையின் தங்க சங்கிலியை லெனின் மேரியிடம் ஒப்படைத்தார். மேலும் நகை கிடைக்க காரணமான அமலோற்பவ மேரியின் நேர்மையை குளச்சல் போலீசார் பாராட்டினர்.


Next Story