பஸ்சில் தவறவிட்ட கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
பஸ்சில் தவறவிட்ட கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
கூடலூர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கூடலூருக்கு நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று வந்தது. அப்போது பைகாரா படகு இல்லத்துக்கு செல்வதற்காக ஊட்டியில் இருந்து வடமாநில குடும்பத்தினர் ஏறினர். பின்னர் அவர்கள் பைக்காராவில் இறங்கினர். அப்போது பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கைப்பையை பஸ்சில் தவற விட்டனர். பின்னர் அவர்கள் இறங்கியதும் பஸ் அங்கிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்தில் கைப்பையை தவற விட்டதை அறிந்த வடமாநில குடும்பத்தினர் உடனடியாக பைக்காரா புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் தர்மேந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக நடுவட்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அரசு பஸ்சை நிறுத்தி கைப்பையை மீட்டனர். பின்னர் அங்கிருந்து வேறொரு வாகனம் மூலமாக பைக்காரா புறக்காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து உரியவர்களிடம் கைப்பை ஒப்படைக்கப்பட்டது.