வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்


வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
x

தர்மபுரி நகரில் சாலை விதிமுறை குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தர்மபுரி

விழிப்புணர்வு

மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவுத்துள்ளது. இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தர்மபுரி நகரில் 4 ரோடு, பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, எஸ்.வி. ரோடு, பைபாஸ் ரோடு, மதிகோன்பாளையம், பென்னாகரம் ரோடு, பெரியார் சிலை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி மற்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

துண்டு பிரசுரங்கள்

இந்த புதிய அபராதம் வசூலிக்கும் முறை தீவிரமாக கடைப்பிடிக்கப்படும். விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படும். எனவே வாகன ஓட்டிகள் அரசின் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கி அறிவுறுத்தினர்.


Next Story