அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்


அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி நகர ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, உள்ளிட்ட விலைவாசி உயர்வுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்தும் தி.மு.க. அரசை கண்டித்தும், சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி சிங்கம்புணரியில் உள்ள வணிகர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அ.தி.மு.க. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு சிங்கம்புணரி நகர செயலாளர் வாசு தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம் முன்னிலை வகித்தார்.

சிங்கம்புணரி பஸ் நிலையம், திண்டுக்கல் சாலை, திருப்பத்தூர் சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், நகர, ஒன்றிய அமைப்பாளர்கள் சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story