தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு


தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
x

தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு

நாகப்பட்டினம்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கரீம் பாசா என்பவர் நாகை மாவட்டம் நாகூர் தர்காவிற்கு குடும்பத்துடன் வந்தார். அப்போது கரீம் பாசா செல்போன் திடீரென காணாமல் போனது. அப்போது தர்காவில் பணியில் இருந்த காவலாளி ஒருவர் கரீம்பாசா தவறவிட்ட செல்போனை எடுத்து வைத்திருந்தார். இதுகுறித்து கரீ்ம்பாசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகூர் தர்கா உள்துறை துணை நிர்வாகி சேக்தாவுத் முன்னிலையில் தவற விட்ட செல்போன் கரீம்பாசாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 More update

Next Story