மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அங்குள்ள 5-வது பிளாட்பாரத்தில் சுற்றித்திரிந்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து அவருக்கு சொல்லத் தெரியவில்லை.
இதனால் அந்தப்பெண்ணின் பாதுகாப்பை கருதி ரெயில்வே போலீசார் அவரை திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story