கிராம சபை கூட்டத்தில் கை கலப்பு


கிராம சபை கூட்டத்தில் கை கலப்பு
x

சுந்தரம்பள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கை கலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம், சுந்தரம்பள்ளி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 5 மற்றும் 7-வது வார்டுகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுந்தரம்பள்ளி ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 5 மற்றும் 7-வது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது இந்திய ஐக்கிய ஜனநாயக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும், அதிகாரிகளும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். கிராம சபை கூட்டத்தில் இருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story