பள்ளி மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி


பள்ளி மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி
x
நாமக்கல்

தமிழ்மொழியில் அழகாக எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கவும், பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுத ஆர்வத்தை தூண்டும் வகையிலும் தமிழ்வளர்ச்சிதுறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கையெழுத்து போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு முடிய ஒரு பிரிவாகவும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மற்றொரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இந்த போட்டியை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜோதி தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான பிரிவுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாகவும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story