குடங்களை மரத்தில் தொங்கவிட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்

குடங்களை மரத்தில் தொங்கவிட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்
x

மூலைக்கரைப்பட்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி, குடங்களை மரத்தில் தொங்கவிட்டு கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி, குடங்களை மரத்தில் தொங்கவிட்டு கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு பஞ்சாயத்து ஆனையப்பபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சீராக குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த மாதம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து சில நாட்கள் சீராக குடிநீர் வழங்கப்பட்டது.

நூதன போராட்டம்

இந்த நிலையில் ஆனையப்பபுரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களை அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆலமரத்தில் கட்டி தொங்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், மூலைக்கரைப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story