தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே புருஷானூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் பலராமன் (வயது 30), சரக்கு வாகன டிரைவர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அவரை குடும்பத்தினர், உறவினர்கள் தேடி பார்த்தபோது, புருஷானூர் குளக்கரை அருகில் உள்ள ஒரு தேக்கு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story