தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Sept 2023 2:00 AM IST (Updated: 12 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூரை சேர்ந்தவர் சாதிக்பாட்சா (வயது 29). பெயிண்டர். இவர் தீபா (25) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நிலையில் சாதிக் பாட்சா சரிவர வேலை கிடைக்காததால் மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் சுய உதவிக்குழுவில் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடிய வில்லையே என்று புலம்பி வந்தார்.

இந்த நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சாதிக்பாட்சா, மனைவியிடம் அருகில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று சாப்பாடு வாங்கி வருமாறு கூறினார். இதை ஏற்று தீபா அங்கிருந்து சாப்பாடு வாங்க சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சாதிக் பாட்சா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story