தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x

சோளிங்கர் அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சோமசமுரந்தரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50), பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து பெருமாள் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story