மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

தாராபுரம் அருகே மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்

தாராபுரம் அருகே மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாய்-மகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியத்தை சோ்ந்தவா் சரஸ்வதி. இவரது மகள் பூங்கொடி (வயது 29). இவருக்கும், தாராபுரம் அடுத்துள்ள தாசா்பட்டியை சோ்ந்த காளிதாஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவா்களுக்கு வா்ஷா (9) என்ற ஒரு பெண் குழந்தை உண்டு.

காளிதாஸ் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டாா். அதைத்தொடா்ந்து அலங்கியம் காமராஜா் நகாில் உள்ள தனது தாய் சரஸ்வதி வீட்டில் பூங்கொடி தனது மகள் வா்ஷாவுடன் வசித்து வந்தாா். வா்ஷா அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். பூங்கொடி சலவை தொழில் செய்து வந்தாா்.

தூக்குப்போட்டு தற்கொலை

கணவர் இறந்ததில் இருந்து பூங்கொடி குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் பூங்கொடியின் கணவா் காளிதாஸ் நினைவுநாள் வந்துள்ளது. அதில் இருந்து பூங்கொடி மிகுந்த மன வருத்தத்துடன் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சரஸ்வதி கடைக்கு சென்று வீட்டிற்கு வந்தார். அப்போது பூங்கொடியும், வா்ஷாவும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்து சத்தம் போட்டு அழுதுள்ளாா்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் ஓடி வந்து பாா்த்தனா். பின்னா் அவா்கள் இது குறித்து அலங்கியம் போலீசாருக்கு தகவல் தொிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா் தாய்-மகள் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பிவைத்தனா்.

குரூப்-4 தேர்வு

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மணிகண்டன் விசாரணை நடத்தினா். இதில் மகள் வர்ஷாவை முதலில் சேலையால் தூக்கிலிட்டு கொன்று விட்டு அதே சேலையில் பூங்கொடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் பூங்கொடி தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூங்கொடி கடந்த 24-ந் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தோ்வை எழுதி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயும், மகளும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story