வெள்ளிச்சந்தை அருகே தூக்குப்போட்டு கட்டிட காண்டிராக்டர் தற்கொலை
வெள்ளிச்சந்தை அருகே தூக்குப்போட்டு கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்து கொணடார்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே தூக்குப்போட்டு கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்து கொணடார்.
வெள்ளிச்சந்தை அருகே உள்ள வடக்கு சரலை சேர்ந்தவர் ஜெகன் (வயது 44). இவருக்கு விஜயகுமாரி(36) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ஜெகன் கேரளாவில் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்பு ஜெகன் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெகனின் மனைவி, பிள்ளைகள், கோவையில் உள்ள உறவினரின் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு சென்றனர். ஜெகன் நிகழ்ச்சிக்கு தனியாக வருவதாக மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. அவரை, மனைவி பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டபோதும், அவர் எடுத்து பேசவில்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் ஊர் திரும்பி விஜயகுமாரி, வீடு பூட்டிக் கிடப்பதை கண்டார். பின்னர், பின்பக்கம் வழியாக மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு ஜெகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். ஜெகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதுபற்றி விஜயகுமாரி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஜெகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.