தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருமருகல் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜெயக்குமார் (வயது33). கூலித்தொழிலாளி. இவரின் தங்கை ராஜகுமாரி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், இதனால் ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரியின் நினைவு நாளில் ஜெயக்குமார் வீட்டில் கொல்லைப்புறத்தில் உள்ள கொட்டகையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.அங்கு ஜெயக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ஜெயக்குமார் மனைவி அமராவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.