தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 45), தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி (40) என்ற மனைவியும், சியாமளா (17) என்ற மகளும் உள்ளனர். முத்துலட்சுமி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மகள் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதனால் ராஜா தனியாக வசித்து வந்தார். இவருக்கு வாத நோய் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கவனிக்க யாரும் இல்லாததால் மனம் உடைந்த ராஜா வீட்டின் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நமண சமுத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நமண சமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.