தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கோத்தகிரி அருகே கருவிலேயே குழந்தை இறந்ததால், தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கருவிலேயே குழந்தை இறந்ததால், தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
தற்கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டாடா பிரிவு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணி என்பவரது மகன் ஸ்ரீஜித் (வயது 27). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி விஜி (24). இவர்களுக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் விஜி 2 மாத கர்ப்பமாக இருந்து உள்ளார். அப்போது கரு போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்ததால், கருவிலேயே குழந்தை இறந்தது. இதனால் ஸ்ரீஜித் மனமுடைந்து காணப்பட்டார்.
மேலும் தினமும் மது அருந்தி விட்டு, வீட்டிற்கு மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீஜித் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். பின்னர் அவர் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சற்று நேரம் கழித்து விஜி அந்த அறைக்கு சென்று பார்த்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீஜித்தின் மனைவி விஜி கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீஜித்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகி 8 மாதமே ஆன நிலையில், தனது குழந்தை கருவிலேயே இறந்த சோகத்தில் ஸ்ரீஜித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.