தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
மார்த்தாண்டம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி மாம்பள்ளி தோட்டத்தை சேர்ந்தவர் ரவி (வயது 57), தொழிலாளி. இவருடைய மனைவி லதா (42) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ரவி அடிக்கடி மனைவி லதாவுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு குடித்து விட்டு வந்த ரவி, மனைவியுடன் வாக்குவாதம் செய்து விட்டு அறையில் தூங்க சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் லதா அறை கதவை திறந்து பார்த்த போது மின்விசிறியில் ரவி தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.