தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் அங்கு பாபு (வயது 50). அச்சகத்தில் பணியாற்றும் இவர் தினசரி மது அருந்தி விட்டு வந்து மனைவி இந்திராவுடன் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அங்குபாபு வீட்டில் இருக்கும்போது இந்திரா வீட்டு கதவை சாத்திவிட்டு வெளியே வந்து அமர்ந்து விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பாபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி இந்திரா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story