தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள வில்லுக்குறி குதிரைபந்தி விளையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 61), தொழிலாளி. இவர் பீரோ செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி வெளிநாட்டில் வீட்டு நர்சாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் விஜயகுமார்(23) நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். தற்போது நடராஜன் மகனுடன் முத்தலக்குறிச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் சரியாகவில்லை. இதனால், அவதிப்பட்டு வந்த நடராஜன் நேற்று மகன் வேலைக்கு சென்றதும் வீட்டில் தூக்கில் தொங்கினார். மதியம் வீட்டுக்கு திரும்பிய மகன் விஜயகுமார், தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நடராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story