ஆனைமலை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


ஆனைமலை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 Jun 2023 1:00 AM IST (Updated: 30 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கோயம்புத்தூர்

ஆனைமலை அருகே சுப்பேகவுண்டன்புதுாரை சேர்ந்த மணிகண்டன் (வயது 39), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஊத்துக்குளியில் வசித்து வந்தார்.நேற்றுமுன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்று வந்தவர், சுப்பேகவுண்டன்புதுாரில் உள்ள வீட்டுக்கு வந்து களைப்பாக இருப்பதாக கூறி தூங்க சென்றார். பின்னர், அவரது அம்மா சவுண்டீஸ்வரி காலை கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, துாக்கு போட்டு மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதேபோல்மதுரையை சேர்ந்த குணால் (வயது 19). இவர் கடந்த 8 மாதமாக ஆனைமலையில் உள்ள தனியார் டிபார்ட்மெண்டில் வேலை செய்து வந்தார். கடந்தாண்டு கல்லூரியில் சேர முடியாததால் மன வருத்தத்தில் இருந்தவர், இந்தாண்டு ஆண்டிப்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனியாக இருந்த குணால், இந்தாண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாதோ என்ற அச்சத்தில் எலி மருந்து தின்று வாந்தி எடுத்தார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் .அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி குணால் நேற்றுமுன்தினம் இறந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.




Next Story