திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே அண்டப்பட்டு அடுத்த ஏப்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜாங்கம் (வயது 36). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாங்கம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story