அனுமன் ஜெயந்தி வழிபாடு


அனுமன் ஜெயந்தி வழிபாடு
x

தா.பழூரில் அனுமன் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை மாலை உள்ளிட்ட பல்வேறு மலைகளை பக்தர்கள் வழங்கி வழிபட்டனர். ஆஞ்சநேயருக்கு மங்கல ஆரத்தி நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு அஷ்டோத்திரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தா.பழூரில் உள்ள பால ஆஞ்சநேயர் என்னும் சஞ்சீவிராயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) லட்சம் அர்ச்சனை நடைபெற்று மாலை 3 மணி அளவில் பால ஆஞ்சநேயர் திருவீதி உலா நடைபெற உள்ளது.


Next Story