அந்தியூரில் இன்று நடக்கிறது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்; மாவட்ட தலைவர் கலைவாணி அறிக்கை

அந்தியூரில் இன்று நடக்கிறது  பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்;  மாவட்ட தலைவர் கலைவாணி அறிக்கை
x

அந்தியூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பங்கேற்குமாறு வக்கீல் கலைவாணி விஜயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரோடு

அந்தியூா்

அந்தியூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பங்கேற்குமாறு வக்கீல் கலைவாணி விஜயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின்கட்டணம், பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஈரோடு வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வக்கீல் கலைவாணி விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

அறிக்கை

அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகே பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பால் விலை உயர்வு, மின்கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியினர், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story