மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் புத்தாண்டு வாழ்த்து
புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை,
புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த புத்தாண்டு, புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும்.
இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024 புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும் வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம்.
இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story