'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி கடலூரில் நாளை மறுநாள் நடக்கிறது
கடலூரில் நாளை மறுநாள் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் நடக்கிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும். எனவே மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். மேலும் கடலூர் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story