சிறுமியை பின் தொடர்ந்து தொல்லை


சிறுமியை பின் தொடர்ந்து தொல்லை
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

உக்கடம்,

கோவை கெம்பட்டிகாலனியை சேர்ந்த 2 சிறுமிகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். அப்போது பள்ளி செல்லும் வழியில் கெம்பட்டி காலனி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் அந்த சிறுமிகளை பின்தொடர்ந்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அந்த சிறுமியின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை அந்த சிறுமிகளின் வீட்டுக்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் வீட்டு ஹாலிங் பெல்லை நிறுத்தாமல் தொடர்ந்து அழுத்தி தொல்லை கொடுத்தனர். சத்தம் கேட்டு எழுந்து வந்த சிறுமியின் பாட்டியை 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியை காண்பித்து மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமிகளின் பாட்டி இதுகுறித்து கோவை கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கெம்பட்டி காலனி பாளையம்தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் உப்புமண்டி பகுதியை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி சிவக்குமார் (வயது21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story