``திருந்துங்கள், இல்லையெனில் கதியற்று போவோம்'' அ.தி.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு


``திருந்துங்கள், இல்லையெனில் கதியற்று போவோம் அ.தி.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
x

``திருந்துங்கள், இல்லையெனில் கதியற்று போவோம்'' அ.தி.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.

திருச்சி,

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நீடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றியை பெறும் முனைப்புடன் அ.தி.மு.க. போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதற்கு கட்சியில் ஏற்பட்ட பிளவும் ஒரு காரணம் என அந்த கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் கட்சி தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி திருச்சியில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில், அ.தி.மு.க. தலைவர்களே ஆட்சியை இழந்தோம். நாடாளுமன்றத்தை துறந்தோம். உள்ளாட்சியில் ஒதுக்கப்பட்டோம். ஈரோட்டில் இரட்டை இலையால் காப்புத்தொகை பெற்றோம். திருந்துங்கள் இல்லையெனில் கதியற்றுப் போவோம்.

இப்படிக்கு எம்.ஜி.ஆர்., அம்மாவின் உண்மை விசுவாசி... ஆர்.டி. சிவபாலன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் (கிழக்கு) என அச்சிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி கட்சி நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story