வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்


வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்
x

வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

திருப்பூர்

அருள்புரம்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில் வேகத்தடையும், நொச்சிப்பாளையம் செல்லும் சாலை ஏ.பி.நகரிலும் வேகத்தடையும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் போடப்பட்டது. வேகத்தடைக்கு சுண்ணாம்பு பூசப்பட்டது. தற்பொழுது இந்த இரண்டு இடங்களில் பூசப்பட்ட சுண்ணாம்பு அழிந்து விட்டது. இதனால் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. உடனடியாக வேகத்தடைக்கு தரமான வர்ணம் பூச வேண்டும் என அப்பகுதி பொதுமக்களுக்கு வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.



Next Story