பஸ்சில் கடத்திய ரூ.19 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


பஸ்சில் கடத்திய ரூ.19 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பஸ்சில் கடத்தி வந்த ரூ.19 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொழிலாளியை கைது செய்தனர்.

நீலகிரி

கூடலூர்,

பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பஸ்சில் கடத்தி வந்த ரூ.19 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொழிலாளியை கைது செய்தனர்.

பஸ்சில் ஹவாலா பணம்

பெங்களூருவில் இருந்து கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்கு பயணிகளுடன் கேரள பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முத்தங்கா சரணாலய பகுதியில் உள்ள தோள்பட்டி என்ற இடத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுனில், அனில் உள்பட போலீசார் பஸ்சுக்குள் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது பயணிகளின் பைகளை திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு பயணி பஸ்சை விட்டு இறங்க முயற்சித்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பணம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஹவாலா பணம் என உறுதி செய்யப்பட்டது.

ரூ.19 லட்சம் பறிமுதல்

பின்னர் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கோழிக்கோடு மாவட்டம் ஆவிலோரா பகுதியை சேர்ந்த தொழிலாளியான அசைனார் (வயது 48) என தெரி வந்தது. அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 500 ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மானந்தவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அசைனாரை கைது செய்தனர்.

இதுகுறித்து வயநாடு போலீசார் கூறும்போது, மாநில எல்லைகள் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், எரி சாராயம் கடத்துவதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தடையை மீறும் நபர்களைப் பிடித்து உடனுக்குடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். எனவே, சமூக விரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றனர்.



Related Tags :
Next Story