ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் உலக தபால் தின விழா


ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் உலக தபால் தின விழா
x

ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் உலக தபால் தின விழா நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் உலக தபால் தின விழா நடந்தது.

உலக தபால் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதி கொண்டப்படுகிறது, இதையொட்டி அரக்கோணம் ஹயக்ரீவர் வித்யாஷரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அசோக் நகர் தபால் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியாற்றும் அலுவலர் பாரதி மற்றும் ஊழியர்களுக்கு தபால் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும், மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த மாதிரி தபால் பெட்டியை அங்குள்ள அலுவலர்களுக்கு பரிசாக வழங்கினர். இதனை தொடர்ந்து தபால் நிலையத்தில் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்பு குறித்தும் சேமிப்பின் அவசியம் குறித்தும் மத்திய அரசின் சிறப்பு திட்டங்களான செல்வமகள் மற்றும் பொன் மகன் சேமிப்பு திட்டங்களின் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு தபால் நிலைய அதிகாரிகள் விளக்கி கூறினர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி இயக்குனர் சாந்தி (கல்வி), நிர்வாக இயக்குனர் ரவீந்திரன், ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story