மதுரை வந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு


மதுரை வந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
x

மதுரை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை


மதுரை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் வருகை

ராமநாதபுரத்தில் இன்றும், நாளையும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். நேற்று இரவு அவர், மதுரையில் டி.எம்.சவுந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார். அதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு விமான நிலையத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மூர்த்தி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து இருந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் வெளியே வந்தவுடன் கோஷம் எழுப்பி வரவேற்பு கொடுத்தனர். பல தொண்டர்கள் முதல்-அமைச்சருக்கு சால்வை அணிவிக்க முண்டி அடித்தனர்.

கையசைத்து மகிழ்ச்சி

ஒவ்வொரு தொண்டரிடமும் முதல்-அமைச்சர் சால்வை மற்றும் புத்தகங்களை பெற்று கொண்டார். அங்கிருந்து கார் மூலம் டி.எம்.சவுந்தரராஜன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்தார். நிகழ்ச்சிக்கு பின் மு.க.ஸ்டாலின், முனிச்சாலை சந்திப்பு வரை நடந்தே சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் இருந்த மக்கள், முதல்-அமைச்சரை நோக்கி கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பதிலுக்கு முதல்-அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி ரிங்ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார். இன்று காலை அவர் ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார்.


Next Story