கோரைப்புற்கள் தீயில் எரிந்து நாசம்


கோரைப்புற்கள் தீயில் எரிந்து நாசம்
x

கோரைப்புற்கள் தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

நன்செய் புகழூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் தனது தோட்டத்தில் விளைந்த சுமார் 3 ஏக்கர் கோரை புற்களை அறுத்து ேபாட்டு வைத்திருந்தார். நேற்று மாலை இந்த கோரைப்புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இதேபோல் திருக்காடுதுறை அருகே உள்ள கரும்பு தோட்டம் அருகே இருந்த முள்வேலிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Related Tags :
Next Story