ரெயில் முன் பாய்ந்து தற்கொலை... அண்ணன் இறந்த அதே இடத்தில் தம்பியும் உயிரை விட்டதால் அதிர்ச்சி
திருமங்கலம் அருகே சகோதரர் தற்கொலை செய்த இடத்திலேயே, வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை,
திருமங்கலம் அருகே சகோதரர் தற்கொலை செய்த இடத்திலேயே, வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மல்லம்பட்டியை சேர்ந்த பாண்டியன் - பாப்பம்மாள் தம்பதியினரின் மூத்த மகன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, மேலக்கோட்டையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர்களது இளையமகன் அருண்குமார் ஒட்டன்சத்திரத்தில் உணவகம் நடத்தி வந்த நிலையில், சுவாமி மல்லம்பட்டிக்கு கோவில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற அருண்குமார், சகோதரர் உயிரிழந்த அதே மேலக்கோட்டையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அருண்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story