புதுச்சேரியில் திருடிவிட்டு தப்பினார்26 பவுன் நகையுடன் போலீசில் சிக்கிய வாலிபர்அம்மாபேட்டையில் தூங்கிக்கொண்டிருந்த போது பிடிபட்டார்


புதுச்சேரியில் திருடிவிட்டு தப்பினார்26 பவுன் நகையுடன் போலீசில் சிக்கிய வாலிபர்அம்மாபேட்டையில் தூங்கிக்கொண்டிருந்த போது பிடிபட்டார்
x

புதுச்சேரியில் திருடிவிட்டு தப்பி அம்மாபேட்டை வந்த வாலிபர், தூங்கிக்கொண்டிருந்த போது, 26 பவுன் நகையுடன் போலீசில் பிடிபட்டார்.

ஈரோடு

அம்மாபேட்டை

புதுச்சேரியில் திருடிவிட்டு தப்பி அம்மாபேட்டை வந்த வாலிபர், தூங்கிக்கொண்டிருந்த போது, 26 பவுன் நகையுடன் போலீசில் பிடிபட்டார்.

திருட்டு

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் திருட்டு போனதாக காலாப்பட்டு போலீசாருக்கு நேற்று முன்தினம் காலை புகார் வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் சிக்னல் மூலம் திருடனை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திருடப்பட்ட வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு செல்போன் எண்ணின் சிக்னல் மட்டும் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிக்னலை பின் தொடர்ந்து போலீசார் வந்தனர்.

பையில் நகை-பணம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு அந்த செல்போன் சிக்னல் ஒரே இடத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னல் காட்டிய இடத்துக்கு புதுச்சேரி போலீசார் சென்றனர்.

அப்போது அம்மாபேட்டை கால்நடை ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் பின்புறம் உள்ள திண்டில் போர்வைைய போர்த்தியபடி ஒரு நபர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் தட்டி எழுப்பினர். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் திடுக்கிட்டு எழுந்தார். மேலும் அவரிடம் இருந்த 2 பைகளையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் 26 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் இருந்ததை போலீசார் கண்டனர்.

மேட்டூரை சேர்ந்தவர்

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் கருப்பரெட்டியூர் அருகே உள்ள கோம்பூரான் காடு பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 30) என்பதும், புதுச்சேரியில் திருடி விட்டு, பஸ்சில் அம்மாபேட்டைக்கு வந்ததுடன், பயண களைப்பில் தூங்கியதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் கோடீஸ்வரனை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 26 பவுன் மற்றும் ரூ.3 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story