அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றபெண் ஊழியர் பணி நீக்கம்


அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றபெண் ஊழியர் பணி நீக்கம்
x

அம்பை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர்

நெல்லை மாவட்டம் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக பெயரை பதிவு செய்து சீட்டு வழங்குவதற்கு ஒப்பந்த பெண் ஊழியர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ பரவியது. இதனைக் கண்டித்து விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் அரசு ஆஸ்பத்திரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., சுகாதார பணிகள் இணை இயக்குனர் (நலவாழ்வு பொறுப்பு) ராமநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

பணி நீக்கம்

இதுதொடர்பாக அம்பை அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியரான மேரி ராஜனை பணி நீக்கமும், மேலும் புகாருக்கு ஆளான 3 ஊழியர்களை பணியிட மாற்றமும் செய்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராமநாதன் உத்தரவிட்டார்.

மேலும் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சேவைக்கு யாரேனும் லஞ்சம் கேட்டாலோ, மருத்துவ சேவை வழங்க மறுத்தாலோ சுகாதார பணிகள் இணை இயக்குனரை 7358122173 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.


Next Story