ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவாலிபரிடம் செல்போன் திருட்டு; 2 பேர் கைது
தேனி அல்லிநகரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வாலிபரிடம் செல்போனை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
பெரியகுளம் தென்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 22). நேற்று இவர் ஒரு வேலை விஷயமாக அல்லிநகரம் வந்தார். அங்கே உள்ள ஒரு ஓட்டலில் செல்போனை பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே அமர்ந்திருந்த 2 பேர் நாகேந்திரனின் செல்போனை திருடி கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து நாகேந்திரன் அல்லிநகரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நாகேந்திரனின் செல்போனை திருடியது, அல்லிநகரம் குளத்து தெருவை சேர்ந்த காமேஸ்வரன் (22), மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த விஷ்வா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story