ஓட்டலில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து திடீர் சாவு
ஓட்டலில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து திடீர் சாவு
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி செல்வி(46) உணவு தயாரிக்க உதவி செய்வார். இந்தநிலையில் ஓட்டலில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்வியின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து, வேல்முருகன் ஓடி வந்து பார்த்த போது செல்வி பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வி எப்படி இறந்தார், காரணம் என்ன என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story